“திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல்”… சிவகார்த்திகேயனை பங்கம் பண்ணி ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு..!

By Nanthini on வைகாசி 22, 2025

Spread the love

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாகத் துறை அதிகாரிகள் தமிழகத்தின் 12 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அதிலும் குறிப்பாக பராசக்தி மற்றும் இட்லி கடை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் தலைமறைவாகினார். டாஸ்மாக் முறைகேடு மூலமாக கிடைத்த பணத்தை வைத்து அவர் தயாரிப்பாளராக வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

அமலாக்கத்துறை ரெய்டு! பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மாயம்? சோதனைக்கு பின் தலைமறைவானோர் லிஸ்ட் | After the ED Raid, Parasakthi Producer Akash Bhaskaran and ...

   

தற்போது ஆகாஷ் பாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் தனுஷ் நடித்த இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி உள்ளிட்ட படங்கள் திறக்கி வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படங்கள் தொடர்பாக அமலாகத் துறை அதிகாரிகள் நடிகர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படியான நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி இருக்கும் பட்சத்தில் திடீர் தளபதிக்கு சிக்கல் வந்துள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

   

விடாது தொடரும் ED ரெய்டு : சிக்கலில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்! ed raid at simbu dhanush sk film-producer akash baskaran house

 

சிவகார்த்திகேயன் தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வணங்கான் படத்தில் நடிக்காமல் தப்பினார் சூர்யா. அதில் அருண் விஜய் நடித்தார். படம் ஃப்ளாப். அடுத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையான பராசக்தியில் கமிட் ஆனார் சூர்யா. பிறகு.. இதில் நடித்தால் மத்திய பாஜக அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தனது பான் இண்டியா ஹீரோ கனவும் புட்டுக்கும் என்பதால், பராசக்தி வேண்டாம் என கழண்டு கொண்டார்., இப்படி ஒரு கான்ட்ரவர்சி கதையில் நடித்தால் தமிழ்நாட்டு மக்களை கவரலாம்.‌ இப்போதைக்கு நமக்கு பான் இண்டியா கனவும் இல்லை.

மீண்டும் இலங்கை வரும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஜே.வி.பி நியூஸ்

ஆகவே வடக்கே சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை. அது படத்தின் ப்ரமோசனுக்கு உதவும். படத்தை தயாரிப்பது dawn pictures. அதை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயண்ட். ஆகவே சிக்கல் இல்லை. அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால்‌‌ மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி. ஆனால் தற்போதைய‌ ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால்.. படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆகாஷ் பாஸ்கரன் எஸ்கேப்.. 'திடீர் தளபதி'க்கு சிக்கல்! சிவகார்த்திகேயன் அவ்வளவு தான்? சொன்னது யாருங்க? | Sivakarthikeyan's Parashakti in Trouble as Producer Akash ...

அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால்‌‌ மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி. ஆனால் தற்போதைய‌ ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால்.. படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்.” என கூறியுள்ளனர்.