Connect with us

CINEMA

தலைக்கு ரொம்ப தில்லு தான்… ஒரு படத்துக்காக 50 தடவைக்கு மேல் மொட்டை அடித்த அஜித்.. கடைசில இப்டி ஆயிடுச்சே..

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் தங்கள் நடிக்கப் போகும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களது உடல் அமைப்பை மாற்றிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். இதனை அதிகமாக சினிமாவில் செய்தவர் நடிகர் விக்ரம் தான். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்றவாறு தன்னுடைய உடல் அமைப்பை அப்படியே மாற்றிக் கொள்வார். இவரைப் போலவே பல நடிகர்களும் சினிமாவுக்காக தங்களது தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அப்படி விடாமுயற்சி திரைப்படத்தில் கூட அஜித் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அஜித் ஒரு திரைப்படத்திற்காக 50 தடவைக்கு மேல் மொட்டை அடித்துள்ளார்.

   

அதாவது தற்போது காமெடி நடிகராக கலக்கும் சிங்கம் புலி ராம் சத்யா என்ற பெயரில் இயக்கிய திரைப்படம் தான் ரெட். கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் தாதாவாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் நடிப்பது என முடிவானதும் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்று நினைத்த அஜித் சலூனுக்குச் சென்று தன்னுடைய முடியை குறைத்து விதவிதமாக வெட்டியுள்ளார்.

அப்போது சிட்டிசன் படத்தில் நடித்த அதே கெட்டப் வந்துவிட்ட நிலையில் மொட்டை அடித்துக் கொண்டார். பின்னர் பத்து நாட்கள் கழித்து கொஞ்சம் முடி வளர்ந்த பிறகு இதுதான் இந்த படத்தின் கெட்டப் என்று முடிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் ஆரம்பித்து முடியும் வரை அஜித் சுமார் 50 தடவைக்கு மேல் மொட்டை அடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களை தவறாமல் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. இருந்தாலும் அஜித்துக்கு அவர் நடித்ததில் பிடித்த திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது,

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top