இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் whatsapp என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமல்லாமல் தற்போது whatsapp மூலமாக அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் கணினி வழியாகவும் whatsapp பயன்படுத்தலாம். ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி பல மோசடிகளும் அரங்கேறுவதாக சமீப காலமாக புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு whatsapp நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் whatsapp கணக்கை இனி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைலில் உள்ள சிம் கார்டு அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். அதனைப் போலவே Web இல் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். இது telegram மற்றும் சிக்னல் செயலிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மணி நேரம் கழித்து மீண்டும் qr கோடு பயன்படுத்தி ஸ்கேன் செய்த பிறகு வெப் whats app பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
