பண மோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவலிங்கா சிட் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த அவர் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையில் ஹோட்டலில் தலைமுறைவாக இருந்த அவரை முற்றுகையிட்டு பணம் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
