புத்தர் ஞானம் பெற்ற புத்த கயா… பலர் அறியாத வரலாற்று தகவல்கள்…

Spread the love

புத்தர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அமைதி பொறுமை ஞானம். புத்தருக்கு ஞானம் கிடைத்த இடம் தான் போதிமரம். அந்த போதிமரம் அமைந்த இடத்தில்தான் புத்தகயா கோவில் அமைந்திருக்கிறது. பழங்காலத்தில் இருந்தே புத்தகயா இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு புனித யாத்திரை மற்றும் வழிபாட்டு தலமாக இருந்து வருகிறது. இந்த புத்த கயா பற்றிய சிறப்புகள் வரலாற்று தகவல்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

புத்த கயா பௌத்தத்தின் புனிதமான இடமாக கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கு கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய நான்கு புனித ஸ்தலங்களில் புத்தகயா மிகவும் முக்கியமானது. இந்த புத்தகயா இந்தியாவில் பிகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் உள்ள முதல் கோவிலை மௌரிய பேரரசர் அசோகர் என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. 29 வயதில் தனது வீட்டை துறந்து துறவரம் ஏற்ற கௌதம புத்தர் இந்த புத்தகயாவில் இருக்கும் போதி மரத்திற்கு கீழ்தான் தியானம் இருந்து ஞானத்தை பெற்றார். அதனால் இது வரலாற்று சிறப்புமிக்க இடமாக கருதப்படுகிறது.

இதனுடன் அமைந்தது தான் மகாபோதி கோவில். இந்தக் கோவிலில் வைர சிம்மாசனம் மற்றும் புனித போதி மரத்துடன் கூடிய கோவிலும் இருக்கிறது. இந்த மரம் முதலில் இலங்கையில் உள்ள ஸ்ரீ மஹா போதி மரத்தின் மரக்கன்று என கூறப்படுகிறது. அசல் போதி மரத்தின் கன்று எடுத்து எடுத்து வளர்க்கப்பட்டதில் இதுவும் ஒன்றாகும். புத்தர் ஞானமடைந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு அசோக பேரரசர் இந்த புத்த கயாவையும், மகாபதி கோவிலையும் நிறுவி இருக்கிறார்.

புத்தகயாவின் வரலாறு பல கல்வெட்டுகள் மற்றும் புனித யாத்திரை புத்தகங்களில் ப்படுத்தப்பட்டு இருக்கிறது. 13ம் நூற்றாண்டில் துருக்கியப்படைகளால் இந்த புத்தகயா கையகப்படுத்தும் வரை பௌத்த நாகரீகத்தின் மையமாக இப்பகுதி இருந்திருக்கிறது. மேலும் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டடு வரையிலான காலகட்டத்தில் டெல்லியை சேர்ந்த சுல்தானால் படையெடுக்கப்பட்டு இதன் அருகில் உள்ள பல பகுதிகள் அழிக்கப்பட்டு இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு புத்த கயாவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. பௌத்த சமயத்தை பின்பற்றும் இலங்கை தாய்லாந்து வியட்நாம் ஜப்பான் சீனா கம்போடியா போன்ற நாடுகளின் சார்பாக புத்தர் கோயில்கள் இங்கு கட்டப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago