பிரபல நடிகரான போஸ் வெங்கட் மெட்டிஒலி சீரியலில் நடித்து பிரபலமானார். இவர் ஈரநிலம், சிவாஜி, மருதமலை, தாம் தூம், சிங்கம், சரோஜா, யாமிருக்க பயமேன், 36 வயதினிலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் போஸ் வெங்கட் நடித்துள்ளார்.இவரது மனைவி சோனியா போஸ் வெங்கட் 3 வயதில் மலையாள திரைப்படமான இவள் ஒரு நாடோடி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பேபி சோனியா என பலராலும் அறியப்படுகிறார்.
கடந்த 1987-ஆம் ஆண்டு நவரத்தி பூவு என்ற திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநிலம் விருது வழங்கப்பட்டது. சோனியா போஸ் ஆசைகள், மலர்கள், முகூர்த்தம், பாசம், செல்லமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியில் கடைசியாக பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். போஸ் வெங்கட் சோனியா தம்பதியினருக்கு தேஜஸ்வின் என்ற மகனும், பவதாரணி என்ற மகளும் இருக்கின்றனர்.
தற்போது போஸ் வெங்கட் இயங்கி உள்ள சார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் சந்தோசத்தை அனுபவிக்க முடியாத சோகத்தில் இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளார். அதாவது போஸ் வெங்கட் தாயார் ராஜாமணி(83) வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார். இவரின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் போஸ் வெங்கட்டுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…