#image_title
நெல்சன் திலிப் குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். சென்னையில் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்ற நெல்சன் ஸ்டார் விஜய் டிவியில் உதவி ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக தனது கேரியரை தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு சிலம்பரசன் வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை நெல்சன் இயக்கினார். ஆனால் அந்த படம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் 2018 ஆம் ஆண்டு நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினர் நெல்சன். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக இந்தி கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இந்த பீஸ்ட் திரைப்படம் 300 கோடி வசூலித்தது. இதனால் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஆனார் நெல்சன்.
நடிகர் விஜய்யை வைத்து வெற்றி படத்தை இயக்கிய பிறகு அதற்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த நெல்சன் ஜெய்லர் திரைப்படத்தை இயக்கினர். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
தற்போது படம் இயக்குவதில் இருந்து தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நெல்சன். அப்படி அவர் தயாரிக்கும் முதல் படம் தான் கவின் நடிக்கும் Bloody Beggar திரைப்படம். இந்தத் திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்சன் Bloody Beggar திரைப்படத்திற்கு கவினுக்கு பதிலாக வேறு யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று தான் நினைத்ததை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் இந்த படத்தை கேட்ட பிறகு முதலில் கவினை இந்த படத்தின் நாயகனாக நடிக்க வைக்க வேண்டாம் என்று தான் இயக்குனர் சிவபாலனிடம் நான் கூறினேன். என்னுடைய சாய்ஸ் இந்த படத்திற்கு நான் யோசித்து வைத்திருந்தது தனுஷ் அல்லது விஜய் சேதுபதி தான். அவர்களிடம் பேசி நடிக்க வைக்கலாம் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இயக்குனர் சிவபாலன் தான் விடாப்பிடியாக கவின் இதற்கு செட்டாவார் அவர் நடிக்க வேண்டும் என்று கூறினார். சரி என்று நானும் ஒத்துக் கொண்டேன். இப்போது படம் வெளிவந்த பிறகு தான் நான் சொன்னது தப்பு என்று புரிஞ்சுகிட்டேன். கவின் அவ்ளோ சூப்பரா நடிச்சிருக்கான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் நெல்சன்.
சந்திராயன்குட்டா பகுதியில் கார் ஸ்பேர் டயரை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்ற நபரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர்…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திமுக-வை நோக்கி இதுபோன்று ஆயிரக்கணக்கான…
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணுவத்தில் இணையும் போதே வீரர்கள் ரகசியங்களை காக்க கடுமையான உறுதிமொழி ஏற்கின்றனர். இந்த…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த…
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுந்து வரும் வதந்திகளுக்கும்…