அடேங்கப்பா… முடி வெட்ட 17 லட்சமா…? தலை சுற்ற வைக்கும் Brunei Sultan இன் வாழ்க்கை முறை…

By admin on புரட்டாதி 9, 2024

Spread the love

உலகில் மிகவும் பணக்காரர்கள் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் யார் என்று கேட்டால் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பில்கேட்ஸ், அம்பானி, எலன் மஸ்க் போன்றவர்கள் தான். ஆனால் யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆடம்பர வாழ்க்கையை வாழும் புருனேவின் சுல்தான் பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரைப் பற்றி தெரிந்து கொண்டால் வாயடைத்து போய் விடுவீர்கள்.

   

புருனே நாட்டின் அதிபதியாக இருக்கும் ஹசனல் போல்கியா இப்படி உமர் அலி சைபுடின் அல்லது சுல்தான் என அழைக்கப்படுபவர் கிட்டத்தட்ட 40 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆடம்பரமான மனிதராக விளங்குகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்த இவர் இன்றளவும் எலிசபெத்துக்கு பிறகு அதிக வருடங்கள் ஆட்சியில் இருப்பவர் சுல்தான் தான்.

   

சுல்தான் சிறுவயதிலேயே இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி படித்த ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். தங்கத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார் சுல்தான். படித்து முடித்து புருனே திரும்பும் வரை அடிப்படை தேவைகளுக்கு கூட ஆடம்பரமான செலவினை செய்து உச்சத்தை தொட்டவர் சுல்தான். அவர் என்னென்ன ஆடம்பரமான பொருட்கள் வைத்திருக்கிறார் எப்படி செலவு செய்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.

 

உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் விலை உயர்ந்த கார் கலெக்ஷன் சுல்தானிடம் தான் உள்ளது. இவரது கலெக்ஷனில் தங்கம் பூசப்பட்ட ரோல்சரைஸ் காரும் உள்ளது. அந்த புகைப் படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இது மட்டுமில்லாமல் இவரிடம் மொத்தம் 500க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் 450 ferrari 380 பென் கிளிக் போன்ற 7000க்கும் அதிகமான கார்களை வைத்திருக்கிறார் சுல்தான்.

உலகின் விலை உயர்ந்த காரை தங்கத்தில் வைத்திருக்கும் சுல்தான் தனி விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார். இவரது தனி விமானத்தை பறக்கும் அரண்மனை என்று சொல்வர். தகவலின் படி இவரது விமானத்தின் விலை 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு ஏர்பஸ் ஏ 340 விமானத்தை பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கும் மேலே சுல்தான் அரண்மனை 2 லட்சம் சதுர மீட்டர் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை இது தான். இந்த அரண்மனையில் 1700 க்கும் மேற்பட்ட அறைகள் 5 நீச்சல் குளங்கள் 5000 பேர் இருந்து சாப்பிடும் அறை ஆகியவை கொண்டு பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

சுல்தான் ஒவ்வொரு முறை முடி வெட்டும் போதும் இந்திய பணத்தில் 17 லட்ச ரூபாய் செலவு செய்வாராம். அதற்கு லண்டனில் இருந்து அவரின் முடியை திருத்த ஸ்பெஷலான ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டை விமானத்தில் வர வைப்பாராம். அப்படி தனது ஆடம்பரத்தினால் உலகையே மிரள செய்து இருப்பவர் சுல்தான். இவர் எப்படி இருக்கிறாரோ அதேபோல் இவரது நாட்டு மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இவரது நாட்டில் மக்களுக்கு கல்வி இலவசம் மற்றும் வருமான வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.