அமீர் சுல்தான் எனப்படும் அமீர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொருளாதாரம் பயின்று இருந்த அமீர் சினிமாவில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

ஆரம்பத்தில் இயக்குனர் பாலா அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அமீர். பாலா இயக்கி விருது பெற்ற திரைப்படமான சேது மற்றும் 2001 ஆம் ஆண்டில் நந்தா ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். அமீர் அதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் தான் திரிஷா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்திருந்த மௌனம் பேசியதே திரைப்படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்ததால் பாராட்டுகளையும் பெற்றது.
2005 ஆம் ஆண்டு ஜீவாவை வைத்து ராம் பின்னர் 2007 ஆம் ஆண்டு மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தியை அறிமுகம் செய்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.
2009 ஆம் ஆண்டு யோகி 2013 ஆம் ஆண்டு ஆதி பகவன் ஆகிய திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார் அமீர். பின்னர் நடிப்பில் ஆர்வம் காட்டிய அமீர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். வட சென்னை, மாறன், நினைத்தது யாரோ, யுத்தம் செய், பூஜா திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அமீர். வடசென்னை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதினை வென்றிருக்கிறார் அமீர்.
எப்பொழுதும் எதையுமே வெளிப்படையாக பேசக் கூடியவர் அமர். அவரை கூறி இருக்கிறார் நான் வருடத்திற்கு ஒரு படம் எடுப்பவன் அல்ல குறைவான படங்களை கொடுத்தாலும் தரமான படங்களை இயக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்று கூறி இருக்கிறார். தற்போது தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் அமீர்.

அது என்னவென்றால் சினிமா சினிமாவாக மட்டுமே இருக்க வேண்டும். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளையும் இசை வெளியீட்டு விழாக்களையும் கல்லூரியில் நடத்தக்கூடாது. அதை தவிர்க்க பட வேண்டும். அதற்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்திருக்கிறார் அமீர்.
