உன்னால இது முடியாதுன்னு சொன்னாங்க… கேட்டரிங்கில் அண்ணனை மிஞ்சிய மாதம்பட்டி ஐஸ்வர்யா சொன்ன வார்த்தை…

By admin on புரட்டாதி 9, 2024

Spread the love

தற்போது பெரிய பெரிய நடிகர் நடிகைகள் செலிப்ரடீஸ் வீட்டிற்கு சமையல் கேட்டரிங் செய்வதற்கு முதல் ஆளாக லிஸ்டில் இருப்பது மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தான். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தனது தந்தை செய்த சமையல் பிசினஸை அவர் கையில் எடுத்து உலக ஃபேமஸ் அளவில் செய்து வருகிறார். தற்போது அவர் வழியே மிகவும் பிரபலமாகி கொண்டு இருப்பவர் மாதம்பட்டி ஐஸ்வர்யா நாகராஜ். இவர் மாதம்பட்டி ரங்கராஜின் ஒன்றுவிட்ட தங்கை ஆவார்.

   

மாதம்பட்டி ஐஸ்வர்யா மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் சித்தப்பா மகள். ஐஸ்வர்யாவின் தந்தையும் ரங்கராஜ் அவர்களின் தந்தையும் ஒன்றாக சமையல் பிசினஸை செய்து வந்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் பிள்ளைகளான ரங்கராஜ் அவரது தந்தையின் சமையலையும் மாதம்பட்டி ஐஸ்வர்யா அவரது தந்தையின் சமையல் பிசினஸையும் கையில் எடுத்து இருவரும் வேறு வேறு ஸ்டைலில் செய்ய தொடங்கினர். அப்படி ஆரம்பித்த மாதம்பட்டி ஐஸ்வர்யாவின் கேட்டரிங் பெயர் Wedding Flavours என்பதாகும்.

   

என்னதான் வீடுகளில் சமையல் என்றாலே பெண்கள் தான் என்று இருந்தாலும் ஹோட்டல் உள்ளிட்ட கேட்டரிங் துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. அந்த ஆணாதிக்கம் நிறைந்த துறையில் நம்மளால் சாதிக்க முடியாதா என்ற துணிவுடன் இறங்கி அசத்திக் கொண்டிருக்கிறார் மாதம்பட்டி ஐஸ்வர்யா நாகராஜ்.

 

இதைப் பற்றி அவர் கூறும் பொழுது எங்கள் டோட்டல் ஃபேமிலி மாதம்பட்டி சமையல் வேலைதான் பிரதான தொழில். எங்களது மாதம்பட்டி பெயரையும் சமையல் கலையையும் உலகறிய செய்தது ரங்கராஜ் அண்ணா தான். எனக்கும் அண்ணா நிறைய சப்போர்ட் பண்ணாங்க. அவர் இல்லனா நாங்க வெளியே தெரிந்திருக்கவே மாட்டோம். நான் அப்பாவோட பிசினஸ் டேக் ஓவர் பண்ணும் போது எனக்கு ரொம்ப விமர்சனம் பண்ணாங்க. உன்னால இது செய்ய முடியுமா இந்த மாதிரி பிசினஸ் எல்லாம் ஆண்களுக்கு தான் சரியா வரும் நீ ரொம்ப சின்ன பொண்ணு அப்படி எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இதுல இறங்கி சாதிக்கணும் அப்படிங்கறது என்னோட லட்சியம் கனவு அதை என்னால எவ்வளவு பெஸ்ட்டா செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டு தான் இருக்கேன் என்று தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் கூறியிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் ஒன்றுவிட்ட தங்கை மாதம்பட்டி ஐஸ்வர்யா.