Startup
தண்ணீரில் இருந்து குளிர்பானம் வரை… ரூ. 2300 கோடி வருவாய் பெறும் Bisleri இன் வரலாறு தெரியுமா…?
Bisleri இன்டர்நேஷனல் என்பது ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்த பாட்டிலின் தண்ணீர் மிகப் பிரபலமானது. இது தண்ணீர் மட்டுமல்லாமல் குளிர்பானங்களையும் விற்பனை செய்யும் நிறுவனமாகும். 150 செயல்பாட்டு ஆலைகள், 6000 விநியோகஸ்தர்கள், 7500 விநியோக வண்டிகள் கொண்ட பிஸ்லெரி தனது பெரும்பாலான வணிகங்களை இந்தியாவில் நடத்தி வருகிறது. தற்போது இந்த பிஸ்லெரி நிறுவனத்தின் வரலாறு என்பது என்ன என்பதை இனி காண்போம்.
1966 ஆம் ஆண்டு இத்தாலிய மருத்துவர் ஜெசரி ரோஸ்லின் மற்றும் பாட்டில் தண்ணீரை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மட்டுமே பிஸ்லெரி விற்கப்பட்டது. அப்போது நஷ்டத்தை சென்று கொண்டிருந்த பிஸ்லெரி நிறுவனம் இந்தியாவிற்கு வெளியேற முயற்சித்தது. அப்போது 1969ஆம் ஆண்டு பார்லே குடும்பத்தின் ஜெயந்திலால் சவுகான் பிஸ்லெரி பிராண்டை நாலு லட்சத்திற்கு வாங்கினார்.
1970களில் ஜெயந்திலால் ஜவஹான் தனது இரண்டு மகன்களுக்காக இரண்டாக வியாபாரத்தை பிரித்துக் கொடுத்தார். அவரின் முதல் மகனான பிரகாஷ் சவுகான் பார்லே அக்ரோவின் கட்டுப்பாட்டை பெற்றார். இரண்டாவது மகன் ரமேஷ் சவுகான் பார்லே ஏற்றுமதியை பெற்றார்.
1976 ஆம் ஆண்டு பார்லே எக்ஸ்போர்ட்ஸ் மாம்பழ சாறினால் செய்யப்பட்ட மாசாவை அறிமுகப்படுத்தியது. 1977-ல் இந்தியாவில் இருந்து கோகோ நிறுவனம் வெளியேறியதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பார்லே, தம்சப், லிம்கா போன்ற கார்பனெட் பானங்களை அறிமுகப்படுத்தியது.
1991 ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்களால் கொக்கோகோலா நிறுவனம் இந்தியாவிற்கு திரும்பியது. அப்போது பார்லே நிறுவனம் தன்னுடைய கார்போனேட் பிராண்டுகளை கோகோ கோலா நிறுவனத்திற்கு 200 கோடிக்கு விற்பனை செய்தது.
2000 களுக்கு பிறகு பிஸ்லரி என்ற மினரல் வாட்டர் நிறுவனத்தை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. 2010 ஆம் ஆண்டிலிருந்து உத்தரகாண்டில் உள்ள இமயமலை அடிவாரத்தில் இருந்து நீரூற்றிலிருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு பிஸ்லேரி வேதிகா என்ற பிரீமியம் பாட்டில் வாட்டர் பாட்டிலை அறிமுகப்படுத்தியது.
2016 ஆம் ஆண்டில் பிஸ்லெரி கார்பனேட் பிரிவில் மறுபடியும் நுழைந்தது. அதன் கீழ் பிஸ்லரி பாப் என்ற நான்கு வகையான குளிர்பானங்களை அறிமுகப்படுத்தியது. அதுதான் லிமோனோட்டா, போன் சோ, ஸ்பைசி மற்றும் வினா கோளாடா என்பதாகும்.
2021 ஆம் ஆண்டில் பிஸ்லரி தனது கை சுத்திகரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. 2023ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை விரிவடைந்தது. தற்போது பிஸ்லரி இந்தியன் சூப்பர் லீக் ஆகியவற்றில் உள்ள ஐந்து அணிகளுக்கு அதிகாரப்பூர்வ Dehydration பார்ட்னராக இருக்கிறது. தற்போதைய இந்தியாவில் உலகமயமாக்கப்பட்ட பாட்டில் தண்ணீர் பிரிவில் பிஸ்லெரி 32 சதவீதம் பங்கு கொண்டு உள்ளது. 50 வருடம் பழமையான எந்த பிஸ்லரி நிறுவனம் தற்போது 200300 கோடி வருவாயை ஈட்டி வருகிறது. தற்போது ஜெயந்திலால் சௌஹானின் பேத்தியான ஜெயந்தி சவுகான் தற்போது பிஸ்லெரி நிறுவனத்தை பன்னாட்டு நிறுவனமாக திறம்பட நிர்வாகித்து வருகிறார்.