பா. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகர் தனுஷ் இயக்குனராக களம் இறங்கிய திரைப்படம் தான் ராயன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 158 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது குபேரா திரைப்பட பணிகளில் தனுஷ் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.

ஏற்கனவே அறிமுக நடிகர் நடிகைகளை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை அவர் ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், தனது இயக்குனர் தனுசுடன் இணைந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தனுஷின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து ஜிவி பிரகாஷ் அதனை மாபெரும் வெற்றி திரைப்படங்களாக மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷின் NEEK படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Shoot time with my director @dhanushkraja … #neek fever is on 🔥🔥 pic.twitter.com/Alb0Om14fF
— G.V.Prakash Kumar (@gvprakash) August 23, 2024
