தலத்தால் கர் என்பது அசாம்மில் அமைந்திருக்கும் ஒரு பாரம்பரியமான இடம் ஆகும். மன்னர் ருத்ர சிங்18 ஆம் நூற்றாண்டில் இதை உருவாக்கி இருக்கிறார். இந்த தலத்தால் கர் எதற்காக உருவாக்கப்பட்டது இதன் வரலாறு என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

தலத்தால் கர் என்பது அசாமில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரங்கூரில் அமைந்திருக்கிறது. அகம் காலகட்டத்தில் கட்டப்பட்ட நினைவு சின்னங்களில் இது மிகப்பெரியது ஆகும். இந்த தலத்தால் கர் ஆரம்பத்தில் ராணுவ தளமாக கட்டப்பட்டது. இதில் இரண்டு சுரங்கங்கள் மூன்று நிலத்தடி தளங்களைக் கொண்டிருந்தது. பிறகு அரண்மனையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த தாலத்தால் கர் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இருந்தாலும் மன்னர்களின் பெருமையை காட்டி கொடுக்கிறது.
இந்த தலத்தால் கர் அரண்மனை ஏழு மாடிகளை கொண்டிருந்தது. அதில் நான்கு மாடிகள் தரையில் காணப்படுகின்றன மற்றும் நிலத்துக்கு அடியில் மூன்று மாடிகள் இருந்திருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் காலகட்டத்தில் அது சீல் வைக்கப்பட்டு மண்ணால் நிரப்பப்பட்டு மூடப்பட்டு இருக்கிறது. எதிரிகள் படையெடுத்து வந்தால் அவர்களை தாக்குவதற்காக வசதிகள் செய்யப்பட்டு ராணுவ தளமாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. நிலத்துக்கு அடியில் பல ரகசிய சுரங்க பாதைகள் வைப்பது உள்ளே சென்று வெளியேறுவது போன்ற ரகசியமான பாதைகளைக் கொண்டு இருந்திருக்கிறது.
மேலும் இந்த தலத்தால் கர்ரில் ஸ்டோர் அறைகள் வேலைக்காரர்கள் தங்கும் அறை சமையலறை போன்று ஒரு அறை தெய்வங்களின் உருவங்கள் அழகாக பொறிக்கப்பட்டிருக்கும் இடங்கள் என பல ரசித்து பார்க்கும் படியாக வகையில் இருக்கிறது. 2000 காலகட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த வளாகத்தில் வடமேற்கு வடகிழக்கு பகுதியில் புதைக்கப்பட்ட கட்டமைகளை கண்டறிந்தனர்.

அந்த ஆராய்ச்சியில் பொருட்கள் குவளைகள் பாத்திரங்கள், கிண்ணங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மன்னர்கள் தங்களது காலத்தில் ஏதாவது ஒன்று தங்களது பெயரை சொல்லும் படி செய்து வைத்திருக்கிறார்கள் ஆனால் காலப் பகுதியில் பல அழிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் இந்த தலத்தால் கர் அழியும் நிலையில் இருக்கிறது. நீங்கள் அஸ்ஸாம் சென்றால் கண்டிப்பாக இந்த இடத்தை பார்த்து ரசியுங்கள்.
