தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ வெ ராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும் சாதியை அகற்றுவதற்காகவும் மூடநம்பிக்கையை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் பெரியார். இவைருடைய சுயமரியாதை இயக்கமும் பகுத்தறிவாதமும் மிகவும் புகழ் பெற்றது ஆகும்.
ஈரோட்டில் பிறந்து வளர்ந்த ராமசாமிக்கு சிறு வயதில் இருந்தே புரட்சிகரமான எண்ணங்கள் அதிகமாக இருந்திருக்கிறது. 19 வயதிலேயே நாகம்மையாரை மணந்து கொண்டார் பெரியார். நாகம்மையார் தனது கணவரின் புரட்சிகரமான செயல்களுக்கு முழுவதுமாக ஆதரவு கொடுத்தவர். இவருக்கு முதலாவதாக பிறந்த குழந்தை ஐந்து மாதங்களில் இறந்தது. அதற்கு பிறகு பெரியாருக்கு பிள்ளைகள் இல்லை.
ஈ வெ ராமசாமி எனப்படும் பெரியார் தனது எழுபதாவது வயதில் 32 வயதுடைய காந்திமதி என்னும் மணியம்மையை மணந்ததால் திராவிட கழக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ராமசாமியை விட்டு பிரிந்தனர். பெரியார் மணியம்மையை தனது சொத்துகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் பாதுகாவலராக நியமித்தார். 1904 ஆம் ஆண்டு பெரியார் இந்துக்களின் புனித தளமான காசிக்கு புனித பயணியாக துறவறம் மேற்கொள்வதற்காக சென்றார். அங்கு நடக்கும் அநீதியான செயல்கள் பிச்சை எடுத்தல் கங்கை ஆற்றில் மிதக்கப்படும் பிணங்கள் போன்ற அவலங்களை கண்டு மிகுந்த கோபம் கொண்டார்.
அதிலிருந்து தான் அவரது எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது என்றும் கூறலாம். 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரியார் காந்தியின் வழியே சென்று அவர் அணிந்த கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொள்ள தொடங்கினார். பிறரையும் உடுத்தும்படி செய்தார். சாதியை வேரறுக்க பெரும்பாடு பட்டார் பெரியார். 1921 ஆம் ஆண்டு ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை தண்டனையை பெற்றார்.
1922 ஆம் ஆண்டு பெரியார் சென்னை காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைவரும் சமம் என்ற கருத்துக்களை பரப்பினார். சாதி மறுப்பு திருமணத்தையும் கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தினார். பெரியார் கோயிலில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் குழந்தை திருமணத்தையும் தடை செய்ய விரும்பினார்.
அண்ணாதுரை உடனான இவரது கருத்து வேறுபாடினால் கட்சியிலிருந்து பிரிந்தார். தான் கொண்ட கொள்கைகளை இறுதி வரை பின்பற்றியவர் பெரியார். இவருடைய பகுத்தறிவு சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவரை தந்தை பெரியார் வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் மக்கள் அழைத்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…