நம்மில் பலருக்கு பலவிதமான விருப்பங்கள் ஆசைகள் இருக்கும். சிலருக்கு நீண்ட காலமாக இது நடந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சில பல சூழ்நிலைகள் காரணமாக நினைத்த காரியம் நடக்காமல் தள்ளிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்டவர்கள் விரைவில் தாங்கள் நினைக்கக்கூடிய காரியம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யலாம். இதை எப்படி எளிமையாக செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.

இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்வதற்கு நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து விட வேண்டும். காலை 5 மணிக்கு 5:30 மணிக்கு எழும்பலாம் ஆனால் ஆறு மணிக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். சூரியன் உதயமாவதற்கு முன்பு இந்த பரிகாரம் செய்தால்தான் உடனடி பலன் கிடைக்கும்.
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு இரண்டு கைப்பிடி கல் உப்பு தேவைப்படும். அதை இரவு தூங்குவதற்கு முன்பே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தலையணைக்கு அருகே பக்கத்தில் வைத்து விட்டு தூங்குங்கள். காலையில் எழுந்தவுடன் கல் உப்பை பார்த்து கண்விழிக்க வேண்டும்.
பிறகு இந்த கல் உப்பை இரண்டு கைப்பிடி அள்ளிக்கொண்டு கல் நிரம்ப இருக்கும் இரண்டு கைகளையும் உங்கள் தொடை மேல் வைத்து எனக்கு நல்லது செய்த இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி என்று முதலில் சொல்ல வேண்டும். மனதை ஒரே எண்ணத்தில் ஒரே நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக நீங்கள் நினைத்த காரியம் எதுவோ அதை நினைத்து சொல்ல வேண்டும் அதை சொல்வதற்கு முன் நீங்கள் கிழக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் எனக்கு விரும்பிய வேலை கிடைத்துவிட்டது நான் எதிர்பார்த்த சம்பளம் எனக்கு கிடைத்துவிட்டது என்று சொல்ல வேண்டும். இதே போல் கடன் பிரச்சனையோ, வேறு எந்த பிரச்சனையோ அதை பாசிட்டிவாக சொல்ல வேண்டும். எந்த கோரிக்கை வைத்தாலும் நன்றி என்ற வார்த்தையை கண்டிப்பாக கூறுவதற்கு மறக்க கூடாது.

இப்படி நீங்கள் நடக்க விரும்பிய ஒரு காரியம் நடப்பதற்கு முன்பே நடந்து விட்டதாக எண்ணி இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கூறுவதே இந்த கல் உப்பு பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியமாகும். இப்படி நீங்கள் நினைக்கும் காரியத்தை தொடர்ந்து பத்து நாட்கள் அதிகாலையில் எழும்பி இந்த கல் உப்பை கையில் வைத்துக் கொண்டு இந்த மாதிரி பரிகாரத்தை செய்யும் போது பத்து நாட்களில் மாற்றம் தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்து முடித்தபின் கையில் இருக்கும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இதை செய்யும்போது மன உறுதியுடன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
