#image_title
இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன. அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அப்படிப்பட்ட மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமிக்க ஒரு இடம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் கங்கைகொண்ட சோழீஸ்வரர் என்கிற சிவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயம் தான் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில். இது அமைந்திருக்கும் இடத்தையே கங்கைகொண்ட சோழபுரம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தை கோவிலை உருவாக்கியது மாமன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் ஆவார். கங்கை ஆறு வரை படை எடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் ராஜேந்திர சோழ மன்னன் அமைத்து இந்த கோவிலும் கட்டி இருக்கிறார்.
இந்தக் கோவிலில் ஐராவதேஸ்வரர் பெருவுடையார் என பல சிறு கோயில்கள் அமைந்திருக்கிறது. இந்த திருத்தலம் திரு விசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலை பிரகதீஸ்வரர் கோவில் என்றும் கூறுவார்கள். ஏனென்றால் இங்கிருக்கும் சிவனை பிரகதீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். சிவனுடன் தேவி பெரியநாயகி அம்மனும் தனி சன்னதியில் அமைந்திருக்கிறார். சமீபத்தில் இந்த கோவிலில் கொடிமரம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது.
சோழ காலத்தின் கட்டிடக்கலை சிறப்பாக இந்த கோவில் எடுத்துக்காட்டுகிறது. இந்த கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் நடராசர் பிரம்மன் துர்க்கை திருமால் சரஸ்வதி என 50க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இந்த கோவிலில் அமைந்திருக்கிறது. இந்த திருக்கோவிலை பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒன்பது கோள்களை குறிக்கும் ஒற்றை கல்லினால் ஆன நவக்கிரகம் இங்கு அமைந்திருக்கிறது.
முதலாம் ராஜேந்திர சோழருக்கு பின்னர் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டி பராமரித்து வந்தனர். முதலாம் குலோத்துங்க சோழன் இந்த நகரை சுற்றி கோட்டை சுவர்கள் கட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஏராளமான பிரமாண்டமான கட்டிடங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 13 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அந்த இடத்தை வென்ற பாண்டியர்கள் சோழர்கள் மீதுள்ள கோவத்தால் இந்த நகரத்தை அழித்தனர். கோவிலும் அதை சுற்றி உள்ள சில பகுதிகளையும் தவிர இந்த நகரத்தின் அரண்மனைகள் போன்ற பல பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இந்த கோவில் எடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் துறை இங்கு அருங்காட்சியம் சிற்றுண்டி விடுதிகள் கடைகள் போன்றவற்றை அமைத்து சுற்றுலா வரும் பயணிகளின் வசதிக்காக பல ஏற்பாடுகளை செய்திருக்கிறது. மன்னர்கள் கால கட்டிடக்கலை அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கங்கைகொண்ட சோழபுரத்தை ஒருமுறை கட்டாயம் சென்று பார்த்து ரசியுங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…