இந்திய குடிமகனாக இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் Aadhar Voter ID Ration Card Pan Card என்பது மிக முக்கியமான Proofகள் ஆகும். இந்த ஒரு விஷயங்களானாலும் இந்த புரூப்புகளை காண்பித்தால்தான் அரசு சார்ந்த தேவைகளுக்கு உபயோகித்துக்கொள்ள முடியும். இதில் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும். அதுபோல PAN கார்டில் புதிய மாற்றங்களும் சிறப்பம்சங்களும் வரவிருக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள PAN கார்டின் ஆயுள் முடிவடைகிறது மற்றும் புதிய கார்டு வர இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து இருக்கிறார். வணிகம் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்டு செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதை நோக்கமாக இந்த புதிய PAN 2.0 அறிமுகம் ஆக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதுவரை 78 கோடி PAN கார்டுகள் வழங்குபட்டு உள்ளதாக கூறி இருக்கிறார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்த புதிய PAN 2.0 கார்டில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புடன் வருகிறது. குறிப்பிட்ட துறைகளில் வணிகம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு PAN கார்டை ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து PAN தொடர்பான சேவைகளுக்கும் ஒரே தளம் உருவாக இருக்கிறது.
பயனர்களின் தரவை பாதுகாக்க வலுவான பாதுகாப்பு முறைகளை செயல்படுத்தவும் PAN ஐ பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பான சேமிப்புகளை கட்டாயமாக்குவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த PAN 2.0 கார்டில் QR குறியீடு அமைக்கப்பட இருக்கிறது.
இந்திய குடிமக்கள் தங்களது PAN எண்ணை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அப்டேட் செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த PAN 2.0 எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.