திவ்யா ஸ்பந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய நடிகை தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் திவ்யா. இவரது பெற்றோர் மாண்டியாவை சேர்ந்தவர்கள். இவரது தாயார் ரஞ்சிதா கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தார். இவரது வளர்ப்பு தந்தை ஆர் டி நாராயணன் தொழிலதிபராவார்.
இவர் தனது பெயரை சினிமாவிற்காக ரம்யா என்று மாற்றி வைத்துக் கொண்டார். ஆனால் தமிழ் சினிமாவில் இவரை திவ்யா என்று அழைக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு கன்னட மொழி திரைப்படத்தில் அறிமுகமானார் திவ்யா. 2004 ஆம் ஆண்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்யா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அந்த நேரத்தில் பிரபலமாக இருந்தார் திவ்யா. தொடர்ந்து கிரி பொல்லாதவன் தூண்டில் வாரணம் ஆயிரம் சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்தார் திவ்யா. இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் 2011 இல் வெளியானது. அதற்குப் பிறகு அரசியலில் ஆர்வம் கொண்டு அரசியலில் இறங்கினார் திவ்யா.
2012 ஆம் ஆண்டு இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த திவ்யா 2013-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். பிறகு 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட திவ்யா தோல்வி அடைந்தார்.
2017 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு புதுப்பிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. தேசிய அளவில் காங்கிரஸ் டிஜிட்டல் குழுவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார் திவ்யா. பல ஆன்லைன் பிரச்சாரங்களை கட்சிக்காக செய்திருக்கிறார் திவ்யா. 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு வருத்தப்பட்டு விலகியதாக செய்திகள் வெளியானது.
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் பாக்ஸ் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் திவ்யா. கன்னடத்தில் ஒரு படத்தை தயாரித்து கடந்த ஆண்டு வெளியிட்டார். 42 வயதாகியும் திவ்யா சிங்கிளாக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.