வெற்றிமாறன் முதல் செல்வராகவன் வரை.. ஆரம்பித்து நிறுத்தப்பட்ட தனுஷ் படங்களின் லிஸ்ட்..!!

By Priya Ram on செப்டம்பர் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ் நடிப்பில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு பாதையில் நிறுத்தப்பட்ட படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

   

தேசிய நெடுஞ்சாலை:

   

தமிழ் இயக்குனரான வெற்றிமாறன் தனுஷை வைத்து தேசிய நெடுஞ்சாலை என்ற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்தார். சில ஆண்டுகள் கழித்து வெற்றிமாறனின் அசிஸ்டன்ட் இயக்குனர் அந்த கதையை உதயம் nh4 என்ற பெயரில் சித்தார்த்தை வைத்து இயக்கினார்.

 

திருடன் போலீஸ்:

பிரபல சினிமட்டோகிராபரான அரவிந்த் கிருஷ்ணா திருடன் போலீஸ் என்ற திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டார். ஆனால் இந்த படமும் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இது மாலை நேரத்து மயக்கம்:

தனுஷ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து செல்வராகவன் மாலை நேரத்தில் மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கத்திட்டமிட்டார். ஆனால் பாதியிலேயே ஷூட்டிங் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு இரண்டாம் உலகம் படம் ரிலீஸ் ஆனது. இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஒரு சில ஐடியாக்களை இரண்டாம் உலகப் போர் படத்தில் செல்வராகவன்  பயன்படுத்தியுள்ளார்.

சூதாடி:

வெற்றிமாறன் இயக்கத்தில் சூதாடி என்ற படத்தில் தனுஷ் நடிக்கவிருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. இந்த படத்திற்கான சூட்டிங் ஐந்து நாட்கள் நடைபெற்றது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

டாக்டர்ஸ்:

டாக்டர் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலின் புகைப்படங்கள் அனைத்து மேகஸினிலும் பப்ளிஷ் ஆனது. ஆனால் செல்வராகவன் வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

காசிமேடு:

கஜினி பட தயாரிப்பாளர் சேலம் ஏ சந்திரசேகர் தயாரிப்பில் செல்வராகவன் தனுஷை வைத்து காசிமேடு என்ற திரைப்படத்தை இயக்க தயாரானார். ஆனால் பொருளாதார சிக்கல்கள் காரணமாக இந்த படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

author avatar
Priya Ram