ஒரே செலவில் இரண்டு நிகழ்ச்சி… கமல்ஹாசனின் சாதுர்யம் யாருக்கு வரும்…?

By Meena on செப்டம்பர் 24, 2024

Spread the love

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் மகா நடிகன். தனது ஐந்து வயது முதலே சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பவர். ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அந்த காலத்திலேயே புகழ் பெற்றவர் கமலஹாசன்.

   

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி ஆகிய படங்களிலும் தோன்றியிருக்கிறார் கமலஹாசன். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமலஹாசன். இவரது வெற்றி படங்கள் கணக்கில் அடங்காதது. தெளிவான தமிழ் பேசக் கூடியவர் கமலஹாசன்.

   

திரைப்படங்கள் மட்டுமல்லாது விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸை ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தவர் கமலஹாசன். 2018 ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி ய்யம் என்ற கட்சியையும் தொடங்கி அரசியல் பணிகளில் அவ்வபோது ஈடுபட்டு வருகிறார் கமலஹாசன்.

 

சமீபத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி அறிவித்த ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற அறிக்கையை பற்றி சென்னை காமராஜர் அரங்கில் மக்கள் நீதி ய்ம் கூட்டத்தை ஏற்பாடு செய்து தனது தொண்டர்களுடன் கலந்துரையாடினார் கமலஹாசன். அதே நாளில் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து இருக்கிறார் கமலஹாசன்.

இதில் கமலஹாசன் அவர்களின் சாதூரியம் என்னவென்றால் காமராஜர் அங்கில் காலையில் இருந்து மதியம் வரை தொண்டர்களுடன் கட்சி மீட்டிங்கை நடத்தி முடித்துவிட்டு மதியத்துக்கு பிறகு தொண்டர்களை வெளியே அனுப்பிவிட்டு உடனே காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி விட்டு அதே மேடையில் அமரன் நிகழ்ச்சியையும் நடத்தி முடித்து விட்டாராம் கமல். ஏனென்றால் அதற்கு பிறகு அவர் வெளிநாடு சூட்டிங் செல்ல வேண்டி இருப்பதால் இந்த மாதிரி செய்துவிட்டாராம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஒரே செலவில் இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி முடித்திருக்கிறார் கமலஹாசன்.