தமிழ் சினிமாவில் 1990களில் பிரபலமான புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சுவலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

சிறுவயதிலிருந்தே சுவலட்சுமி இந்திய பாரம்பரிய நடனங்களை கற்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேடையில் அவரது நடிப்புத் திறனை இயக்குனர் சத்யஜித்ரே கவனித்தார். தனது உத்தரன் திரைப்படத்தில் நடிக்க வைத்து 1994 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார். இது ஒரு பெங்காலி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 1995 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஆசை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சுவலட்சுமி. முதல் படத்தின் மூலமாகவே சிறந்த புதுமுக நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை வென்றார். ஆசை திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார் சுவலட்சுமி.
அடுத்ததாக கோகுலத்தில் சீதை, கல்கி, காதல் பள்ளி, பொன்மனம், இனியவளே, நிலாவே வா, ஹவுஸ் ஃபுல், சுயம்வரம், நீ வருவாய் என, மாயி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் சுவலட்சுமி.
2000 களின் ஆரம்பகட்டத்தில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த சுவைலட்சுமி சூலம் என்ற பக்தி தொடரில் நடித்து பெண்களின் ஆதரவை பெற்றார் சுவலட்சுமி. 2002 ஆம் ஆண்டு பேராசிரியர் ஒருவரை மணந்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் சுவைலட்சுமி.

10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றிய சுவலட்சுமி தனது திரையுலக பயணத்தில் கவர்ச்சியை வேண்டாம் என்று உதறி தள்ளியவர். ஹோம்லியான கேரக்டரில் நடித்து ரசிகர்களை பெற்றவர். இவரது நடிப்பை ரசித்துப் பார்க்கும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் தனது கேரியரில் காதல் சர்ச்சை என எதிலுமே சிக்காத டீசன்டான கௌரவமான நடிகையாக இருந்தவர் சுவலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
