ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை… நாளை முதல் ரயில் டிக்கெட் புக்கிங்… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதேசமயம் டிக்கெட் புக்கிங் முன்னதாகவே தொடங்கி விடும். இப்படியான நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி ஆயுதபூஜை, அக்டோபர் 2 சரஸ்வதி பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை வருகின்றது.

இதனை முன்னிட்டு சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்ல விரும்புவோர் ஆகஸ்ட் 1 நாளை முதல் IRCTC இணையதளத்திலும் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.