அங்கன்வாடி மையங்கள் மட்டுமே டார்கெட்… இரவில் பூட்டை உடைத்து செல்லும் தலைமை ஆசிரியர்… போலீஸ் விசாரணையில் பகீர்..!!

By Soundarya on ஆடி 31, 2025

Spread the love

தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிகளில் சிலிண்டர் திருடி வந்த  சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலம் ஜாம்நகரில் சிலிண்டர்களை திருடி வந்த பள்ளி தலைமை ஆசிரியர் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது குற்றம்சாட்டப்பட்ட இந்த தலைமை ஆசிரியர் 18க்கும் மேற்பட்ட திருட்டுகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் அங்கன்வாடி மையங்களில் மட்டுமே திருடுவதை வாடிக்கையாகி வைத்துள்ளார். இரவில் அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று பூட்டை உடைத்து சிலிண்டர்களைத் திருடுவாராம். இதனால் அங்கன்வாடி பணியாளர்கள் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில் தலைமை ஆசிரியர் சிக்கியுள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து 18 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் ரூ.70,000 ரொக்கத்தை போலீசார் மீட்டுள்ளனர்.