வசூல் வேட்டையில் கோடிகளை குவிக்கும் பஹத் பாசிலின் ‘ஆவேசம்’…  அதிகளப்படுத்தும் 5-ஆம் நாள் வசூல் விபரம்… 

By Begam

Published on:

தமிழ், மலையாளம் என திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பகத் பாசில். தனது நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழிலும் நான்கு தரமான படங்களில் நடித்திருக்கிறார் பகத் பாசில், அவர் முதன்முதலில் கோலிவுட்டில் நடித்த திரைப்படம் வேலைக்காரன்.

   

சமீபத்தில் இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாமன்னன். பொதுவாக படத்தில் ஹீரோ கதாபாத்திரம் தான் ரசிகர்களால் கொண்டாடப்படும். ஆனால் இத்திரைப்படத்திலோ வில்லனாக நடித்த  நடிகர் பஹத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் சமூகவலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது. தற்பொழுது இவர் தமிழ் மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது மலையாளத்தில் நடிகர் பஹத் பாசிலின் நடிப்பில் ‘ஆவேசம்’ எனும் திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தை ஜித்து மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உலகளவில் வெளிவந்த ‘ஆவேஷம்’ திரைப்படம் 5 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. தற்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதால், இனி வரும் நாட்களிலும் இப்படம் கலெக்சனை அள்ளும் என்று கூறப்படுகிறது.