நல்ல படங்களை தவறாக விமர்சிக்கிறாரு.. ரோமியோ படத்தை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க”.. ப்ளூ சட்டை மாறனை தாக்கி பதிவிட்ட விஜய் ஆண்டனி..

By Mahalakshmi on சித்திரை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக அசத்தி வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான திரைப்படம் ரோமியோ. மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் ஹீரோவுக்கு நடிகை மிருணாளினியை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

   

ஆனால் அவருக்கும் ஹீரோயினியாக வேண்டும் என்ற ஆசையால் அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார். இப்படி இவர்கள் இருவரின் வாழ்க்கை பயணத்தை எடுத்து கூறும் படமாக அமைந்தது ரோமியோ. இந்தப் படத்தை பார்த்து ப்ளூ சட்டை மாறன் எப்போதும் போல் விமர்சனத்தை போட்டு தாக்கியிருந்தார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக ஆனதிலிருந்து ஒரே மாதிரியான பேஸ் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து வருகிறார்.

   

 

மனைவியிடம் பேசினாலும், காதலியிடம் பேசினாலும், வில்லனிடம் பேசினாலும் ஒரே மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார் என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இந்த படத்திற்கு ஏன் விஜய் ஆண்டனி இசையமைக்கவில்லை. அதற்கு பதிலாக எடிட்டிங் வேலையில் இறங்கி விட்டார். படத்தில் நன்றாக நடித்தவர்களை எல்லாம் தூக்கிவிட்டு முகத்தை கிளோஸ் அப்பில் வைத்து எடிட் செய்து இருப்பதெல்லாம் மோசமான செயல் என தாறுமாறாக விமர்சித்திருந்தார்.

இதை பார்த்த விஜய் ஆண்டனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொள்ளும் திரு. ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும் இவங்க சொல்றது எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம். ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

#image_title