என் கணவரை சந்திக்க மறுப்பு.. என் ஒப்புதல் இல்லாமலேயே விவாகரத்து.. அதிர்ச்சி கொடுக்கும் ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு..!!

By Priya Ram on செப்டம்பர் 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதனை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக தம்பதியினர் இருவரும் பேசி பரஸ்பரமாக தான் விவாகரத்து செய்வார்கள். இந்த விவகாரத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் கலந்து கொள்ளாமல் விவாகரத்தை அறிவித்ததாக தெரிகிறது.

Jayam Ravi: "ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்" - விவாகரத்தை அறிவித்த ஜெயம் ரவி | Jayam Ravi announced divorce from his wife aarthi - Vikatan

   

இந்த நிலையில் ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலை தளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமல் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம் கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.

   

ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து உண்மை தானா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு - மனிதன்

 

என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீப காலமாக பலவிதம் முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமணம் பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்த அவராகவே எடுத்த முடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஜெயம் ரவி தங்கி இருந்த ஓட்டலுக்கே சென்ற மனைவி ஆர்த்தி… யாருடன் ஜெயம் ரவி தங்கியிருந்தார் தெரியுமா.?

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமும் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. காலம் கடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Polimer News (@polimernews)

author avatar
Priya Ram