ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்துக்கு தனுஷ் காரணமா..? அதீத காதலால் பிரிந்த குடும்பம்.. பிரபலம் சொன்ன தகவல்..!!

By admin on புரட்டாதி 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். சினிமாவில் இளம் காதலர்களாக வலம் வந்த இருவரும் விவாகரத்து செய்தியை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, இந்த விவகாரத்தில் பலரும் பல விதமாக பேச ஆரம்பித்து விட்டனர்.

   

குறிப்பாக ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் எனக் கூறி ஒரு சிலர் ஆர்த்தி தனுசுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பரப்புகின்றனர். அது தவறான செயல். தனுசுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆரத்தியின் நெருங்கிய தோழிகள் சினிமாவை சேர்ந்தவர்கள் தான். அப்படி எதார்த்தமாக எடுத்துக்கொண்ட போட்டோவை பரப்புவது சரியில்லை. ஆர்த்தி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.

   

 

சொல்லப்போனால் ஆர்த்தியின் அதீத காதல் தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்ய வைத்திருக்கிறது. சினிமாவில் ஜெயம் ரவியை வளர்த்து விட்டவர் அவரது அண்ணன் மோகன். ஆனால் தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டபோது ஜெயம் ரவி அதற்கான கால் சீட்டை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார். அந்த அளவுக்கு ஜெயம் ரவி பிஸியாக இருந்தார். எப்போது ஆர்த்தி கதை கேட்க ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து தான் ஜெயம் ரவியின் சினிமா மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. ஜெயம் ரவியின் மொத்த டேட்டையும் ஆர்த்தி திரைப்படங்களில் லாக் செய்துவிட்டார்.

முடிவுக்கு வந்த 15 வருட காதல் வாழ்வு.. ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா.? தீயாய் பரவும் போட்டோ - Cinemapettai

மேலும் தனது கணவரின் மீது உள்ள அதீத காதலால் ஜெயம் ரவி எப்போதும் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கண்காணிக்க ஆள் அமைத்துள்ளார். ஒரு முறை ஊட்டி சூட்டிங் இருந்தபோது இரவு 12 மணிக்கு வீடியோ கால் செய்து ஆர்த்தி ஜெயம் ரவியிடம் பேசியுள்ளார். இது ஜெயம் ரவிக்கு மேலும் மன உளைச்சலை கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு கோவாவுக்கு சென்று ஒரு மாதம் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருப்பதாக அந்தணன் கூறியுள்ளார்.

நரம்பு இல்லாமல் பேசும் நாக்கு..ஜெயம்ரவி - ஆர்த்தி விவாகரத்தில் தனுஷ் காரணமா!! கொந்தளித்த பிரபலம்.. - விடுப்பு.கொம்