ஆசையாக பார்க்க வந்த தீவிர ரசிகரை ஓங்கி கன்னத்தில் பளார் விட்ட அஜித்.. பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்..!

By Nanthini on பங்குனி 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக விடா முயற்சி திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தரமான பேன் பாய் சம்பவமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எவர்கிரீன் பாடல்! அமராவதிக்கு பிறகு அஜித் நடிக்க இருந்த படம்.. நல்ல பாட்ட மிஸ் பண்ணிட்டாரே | ajith missed vikraman movie puthiya mannargal

   

இதனை தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் அஜித் குறித்து நடிகை ஆர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் கேரவனுக்கு கீழே அமர்ந்து கொண்டிருக்கும் போது அஜித் வந்ததும் எழுந்து நிப்பாங்க. உடனே அஜித் கோபப்பட்டு எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க நானும் சாதாரண மனுஷன் தான் எல்லாரும் உட்காருங்க என்று எங்களோடு சரிசமமா உட்காருவாரு.

   

நிபந்தனையின்றி நேசிக்கிறேன்: ரசிகர்கள் குறித்து நடிகர் அஜித் உருக்கம்

 

அதனைப் போல தான் அஜித் சாரின் ஒரு படப்பிடிப்பில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவருடைய ரசிகர் ஒருவர் தனது தலையில் தல என்று முடியை கட் செய்து வந்திருந்தார். கூட்டத்தில் நின்று கொண்டு தல தல என்று கத்திக் கொண்டிருந்தார். முதலில் அதனை கவனிக்காத அஜித் பிறகு அவரை கவனித்து விட்டு காவல் துறையினரிடம் சொல்லி அந்த ரசிகரை தன்னிடம் அழைத்து வர சொன்னார். அவரும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அருகே வந்ததும் அஜித் அவருடைய கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்து விட்டார்.

விஜய் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்ப எங்கனே தெரியல' - விஜய் ரசிகர்களுடன் ஆர்த்தி மோதல் | Actress aarthi fighting with vijay fans on twitter - Tamil Filmibeat

 

அதோடு இல்லாமல் கைல காசு கொடுத்து முதலில் போய் மொட்டை அடிச்சிட்டு வா என்று சொன்னாரு. அந்த ரசிகரும் மொட்டை அடித்து விட்டு மீண்டும் அஜித்தை பார்க்க வந்தார். அப்போது எதுவும் சொல்லாமல் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு நீ தல என்று முடியை கட் செய்ததற்கு உனது பெற்றோர்கள் சந்தோஷப்பட மாட்டார்கள். உங்களுடைய அன்பு இதயத்தில் இருந்தால் மட்டும் போதும் என எடுத்துக் கூறிய ரசிகரை அங்கிருந்து அஜித் அனுப்பி வைத்தார் என ஆர்த்தி பேசியுள்ளார்.