தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம் மற்றும் சந்தா மாமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
வைல்டு கார்டு என்ட்ரி மூலமாக இரண்டாவது நாளில் உள்ளே நுழைந்த இவர் 98 நாட்கள் தாக்குப்பிடித்து இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் மிகவும் நேர்த்தியான காதல் கதைகளை தேர்வு செய்து நடித்த தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மன பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், LGM உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் குடிகொண்டு விட்டார். தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் தற்போது கச்சிதமான கதைகளை தேர்வு செய்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்ணி அவர் கதை தேர்வு செய்வதுபோல இவரும் கதைகளை கச்சிதமாக தேர்வு செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சினிமாவுக்கு வரும்போது தன் படங்களுக்கு அவரை பல கோடி ரூபாய் செலவு செய்து இருப்பார்.
அதனைப் போலவே தற்போது ஹரிஷ் கல்யாண் சண்முக முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள டீசல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படமாக இந்த படம் உள்ளது. கிட்டத்தட்ட 120 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் ஹரிஷ் கல்யாண் இந்த படத்திற்காக 24 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படம் கட்டாயம் வெற்றி பெறும் என்ற பேச்சும் அடிபடுகிறது.