அவர் இல்லனா இன்னைக்கு குழந்தையே இல்ல.. விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்ததற்கு இதுதான் காரணமா..?

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா மற்றும் ராட்சசன் என்று ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஷ்ணு விஷால் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். நீர்ப்பறவை திரைப்படத்தில் துறை இயக்குனராக பணியாற்றிய துணை இயக்குனரும் தன்னுடைய நெருங்கிய தோழியுமான இயக்குனர் நடராஜின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் வைத்த அமீர்கான்.. என்ன  அர்த்தம் தெரியுமா? | actor Vishnu Vishal and jwala gutta's daughter name  mira - Tamil Filmibeat

   

பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். இதனை தொடர்ந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த 2021 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே முதல் மனைவியான ரஜினி மூலம் விஷ்ணு விஷாலுக்கு ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.இதனைத் தொடர்ந்து தன் மகளுக்கு மிரா என்று அமீர்கான் மடியில் வைத்து விஷ்ணு விஷால் பெயர் சூட்டினார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

   

தாய்மாமனாக மாறிய பாலிவுட் நடிகர் அமீர்கான்..! விஷ்ணுவிஷால் மகளுக்கு பெயர்  சூட்டு விழாவில் சுவாரசியம்..! - TamilWire

 

இப்படியான நிலையில் தன் மகளுக்கு அமீர் கானை பெயர் வைக்க சொன்னதற்கான காரணத்தை விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், நானும் ஜுவாலாவும் குழந்தைக்காக சிகிச்சை முயற்சி செய்து மனமுடைந்து இருந்தோம். அதை அறிந்த அமீர் கான் உடனே மும்பைக்கு எங்களை வரவழைத்து மருத்துவரிடம் அழைத்து சென்றதுடன் 10 மாதங்கள் ஜுவாலாவை அவர் வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொண்டார். அவர் இல்லை என்றால் எங்களுக்கு மகள் பிறந்திருக்க மாட்டார். அதனாலாயே குழந்தைக்கு அவரை பெயர் வைக்க சொன்னோம் என்று எமோஷ்னலாக பேசியுள்ளார்.