ஜெயலலிதா தம்பியாக அரசியல் செய்தவன் நான்.. இது எப்படி இ.பி.எஸ்-க்கு தெரியாம போச்சு.. திருமாவளவன்..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்க அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை மீண்டும் தமிழகத்தில் நிலைக்க வைக்க போராடி வருகிறார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் தமிழ்நாட்டுக்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்.

இப்படியான நிலையில் அதிமுக தோழமை கட்சி என்பதால் தான் கூட்டணி குறித்து விமர்சிப்பதாக திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக ஒரு பொருந்தாத கூட்டணி என்ற திருமாவளவன் கூறியதற்கு, எங்கள் கூட்டணி பற்றி கூற அவர் யார் என்று இபிஎஸ் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இப்படியான நிலையில் அதற்கு பதில் அளித்துள்ள திருமாவளவன், பாஜகவால் அதிமுக பாதிக்கப்படக்கூடாது.

   

நான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கே நன்றாக தெரியும், . இ.பி. எஸ்.,க்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. அவர்கள் இருவரும் இணக்கமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அல்ல.ஏனென்றால் திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க., பா.ஜ.,வால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணம் தான். வேறு ஒன்றும் இல்லை. அ.தி.மு.க., இங்கே வலுவாக இருந்தால், பா.ஜ.,வால் இங்கு கால் ஊன்ற முடியாது என்று ஒரு நப்பாசை தான் என்று தெரிவித்துள்ளார்.