ரஜினி கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும்?.. ரஜினியே சொல்லியும் மறுத்த அமீர்கான்.. எந்த படத்தில் தெரியுமா?

By vinoth on பங்குனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

   

இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.

   

 

ரஜினிகாந்த் நடிப்பில் அவரின் சினிமா வாழ்க்கையில் உச்சம் தொட்ட படம் என்றால் அது 2.0 படம்தான். அந்த படம் அவர் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். அந்த சமயத்தில் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாததால் அவரே இயக்குனர் ஷங்கரிடம் ‘இந்த படத்தில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும். அதனால் அவரை வைத்து படமாக எடுங்கள்” என்று கூற ஷங்கர் அமீர்கானை வைத்து இயக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அமீர்கானோ, “நான் கண்ணை மூடி அந்த கதாபாத்திரம் பற்றி யோசித்தாலே ரஜினிகாந்த்தான் கண் முன் வருகிறார். அதனால் என்னால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே முடியாது.” என சொல்லிவிட்டாராம். அதன்பின்னர்தான் ஷங்கர், மீண்டும் ரஜினியையே வைத்து இயக்கினார்.