பாக்யராஜ் சாரக் கலாய்க்குற மாதிரி நான் ஒரு வசனம் பேசிட்டேன்.. அப்போ அவரின் ரியாக்‌ஷன் –  அம்பிகா பகிர்ந்த தகவல்!

By vinoth on பங்குனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.

   

அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.

   

 

இந்நிலையில் பாக்யராஜ் குறித்து அவருடன் ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் ஜோடியாக  நடித்த அம்பிகா ஒரு சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “அந்த 7 நாட்கள் படத்தில் நான் நடிக்கும் போது, பாக்யராஜ் சார் வீட்டுக்கு லேட்டாக வருவது போல ஒரு காட்சி இருக்கும். அப்போது அவரை நான் திட்டுவது போல ஒருக் காட்சி. அப்போது அவர் ‘சரி’ என்று உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார். நான் சிரித்துக் கொண்டு சொல்லு என்பார். இதுக்கு முன்னாடி இருந்த முகமே பரவாயில்லை என்று நானாக ஒரு வசனத்தை சொல்லிவிட்டேன்.

அதன் பின்னர்தான் எனக்கு அது தப்போ என்று தோன்றியது. சார் அந்த வசனம் ஓகேவா என்று கேட்டேன். அவர் நல்லாதான் இருக்கு சொல்லுங்க என்றார். அப்போதே அவர் பெரிய இயக்குனர். நான் அறிமுக நடிகை. ஆனால் எந்த ஈகோவும் பார்க்காமல் அப்படி நடிக்க சம்மதித்தார்.” எனக் கூறியுள்ளார்.