Connect with us

CINEMA

கமல் கொடுத்த ஐடியா… பல கோடி பட்ஜெட்டில் எடுத்து நஷ்டமான திரைப்படம்… இன்று வரை ஆண்டவரிடம் பேசாமல் இருக்கும் பிரபல தயாரிப்பாளர்..!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகர்கள் பலரும் தாங்கள் நடித்த வெற்றி படங்கள் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். ஆனால் தன்னுடைய தோல்வி திரைப்படங்களால் தன்னையும் தன்னுடைய படத்தையும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேச வைத்தவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். சினிமாவிற்கு புதுமையான மற்றும் வித்தியாசமான டெக்னாலஜியை கொண்டு வந்தவர். சினிமாவில் தான் வளர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாமல் தன்னால் சினிமா வளர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்றவாறு தன்னை உருக்கி கொண்டு நடித்தார்.

   

அதனாலையே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதனிடையே இயக்குனர் சங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் தயாரிப்பாளர் வான்டட் ஆக நான் ஒரு படம் பண்ண வேண்டும் அது 10 இந்தியனைப் போல பெரிய பட்ஜெட்டுடன் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கும் வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் கமல் அழைப்பு விடுத்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானுவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பாட்ஷா திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தை மட்டும் தான் எடுத்துக் கொண்டு திரைக்கதை வசனத்தை கமலிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு கமல் இரட்டை வேடங்களில் நடித்த வெளியான ஆளவந்தான் திரைப்படத்தின் மூலம் கலைத்தாகத்தை கமல்  தீர்த்துக் கொண்டாரே தவிர தயாரிப்பாளரை அங்கு நினைக்க மறந்துவிட்டார். இதில் பல டெக்னாலஜிகள் புகுத்தப்பட்டு ஆளவந்தான் திரைப்படம் வேற லெவலில் இருந்தது. பலரும் எதிர்பார்த்து காத்திருந்தா இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. மக்களால் இந்த படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் செலவு வைத்தது மட்டுமல்லாமல் ஆளவந்தான் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய நிறுவனங்கள் முன்வந்த போதும் கமல்ஹாசன் தயாரிப்பாளரிடம் நீங்களே தனியாக இந்த படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறி தரைமட்டம் ஆக்கிவிட்டார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளரும் இன்றுவரை கமல்ஹாசன் உடன் முகம் கொடுத்து பேசுவதில்லை.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top