கருணாநிதி குடும்பத்தால் இனிமேல் முடியாது…! “அவரை உதயநிதி என்று சொல்லாதீர்கள்…” ‘ஆபாசநிதி’ என பெயரிட்டு சாடிய ஆதவ் அர்ஜுனா…!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் விஜய்யையும் பெண்களையும் பற்றித் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அவரை ‘உதயநிதி’ என்று அழைக்காமல் ‘ஆபாசநிதி’ என்றே அழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பெண்களை யார் தவறாகப் பேசினாலும் கைது நடவடிக்கை பாயும் எனக் எச்சரித்தார். மேலும், தவெகவின் வெற்றியே பெண்களால் சாத்தியமானது என்பதால் அவர்களுக்கு எப்போதும் நேர்மையாக இருப்போம் என்றும், இனி கருணாநிதி குடும்பத்திலிருந்து எவரும் முதலமைச்சராக வர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத பெரும் மாற்றத்தைத் தமிழகத்தில் தவெக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, உதயநிதியின் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல என்று விளக்கமளித்தார். திமுக மற்றும் குடும்ப அடையாளத்தை விலக்கிவிட்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உதயநிதி தயாராக இருந்தால், அங்கு ஒரு சாமானியப் பெண்ணை நிறுத்தி அவரைத் டெபாசிட் இழக்கச் செய்யத் தவெக தயாராக உள்ளது என்றும் அவர் சவால் விடுத்தார். திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தற்போது தவெகவுடன் இணைந்துள்ளதால், திமுகவை கண்டு தவெக அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.