ரயில் பயணிகளுக்கு ஷாக்…. இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… ரயில்வே அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு செய்ய வருகின்ற ஜனவரி 12ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் எனப்படும் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். முறைகேடுகளை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை இணைப்பு முறையை ரயில்வே வாரியம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்பது தற்போது அமலில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்ற நேரங்களிலும் ஆதார் இணைப்பை படிப்படியாக கட்டாயமாக்கப்பட உள்ளது. அதன்படி டிசம்பர் 19ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்கு பிறகு காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் டிக்கெட் எடுக்க ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஜனவரி 12 ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைனில் ரயில் டிக்கெட் எடுக்க வேண்டுமென்றால் ஆதார் இணைப்பு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.