CM ஸ்டாலின் தொகுதியில் மட்டும் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்… செம ஷாக்கில் திமுக தலைமை…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு (SIR) தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR பணிகளுக்குப் பிறகு 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

   

இதனிடையே சென்னைக்கான  வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் இருந்த 40,04,694 வாக்காளர்களின் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டு 25,79,676 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்களும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 89,241 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இபிஎஸ் இன் எடப்பாடி தொகுதியில் 26,375 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் 42,119 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.