நடிகர் விஜய்க்கு ஆப்பு வைக்க அடுத்த அதிரடியை துவங்கிய உதயநிதி … அஜீத் நடித்த அந்த படத்தை வரும் ஜனவரியில் களம் இறக்க முடிவு!

By Elango on மார்கழி 19, 2025

Spread the love

நடிகர் விஜய் நடித்த கடைசி படமாக ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் தலைவராகவும் அவர் இருப்பதால் இந்த படம் எப்படியும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருக்கிறது.

ஆனால் ஆளுங்கட்சி திமுகவை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கும் விஜய்க்கு தோல்வி பயத்தை காட்ட திமுக தரப்பில் தீவிர முயற்சி நடக்கிறது. இதில் முதல்கட்டமாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் ஜனநாயகன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் போகவும் பெரிய அளவில் வசூல் ஆவதை தடுக்கவும் மறுநாள் 10ம் தேதியே பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கிறது.

   

இப்போது நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தையும் ரி ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் முவீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 23ம் தேதி அஜீத்குமார் நடித்த மங்காத்தா ரி ரிலீஸாகிறது. இதனால் 3 வாரங்கள் ஜனநாயகன் படம் தொடர்ந்து ஓடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2 பக்கமும் மத்தளத்துக்கு அடி போல பராசக்தி, மங்காத்தா என விஜய் நடித்த ஜனநாயகன் இப்போது இரண்டுபுறமும் சிக்கியுள்ளது.