ஒவ்வொரு இந்தியர்களுக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆதார் அட்டை. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான் கார்டு, பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் ஆகிய அனைத்துக்கும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாதது ஒன்றாக இருக்கிறது .இதுவரை பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கு அதை தங்களுடன் பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் எடுத்துச் செல்ல வேண்டியது இருந்தது. இந்த நிலையை மாற்றி டிஜிட்டல் ஆதார் பயன்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் நம்முடைய ஆதார் எண்ணை பதிவு செய்து முக அங்கீகாரமுறை செய்ய வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் நம்முடைய ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும். நாம் இனி செல்போன் எண் வாங்குவது, வங்கி கணக்கு தொடங்குவது, ஹோட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம். அந்த செயலில் உள்ள கியூ ஆர் கோட்டை காண்பித்தாலே போதும்.
அவர்கள் காட்டும் qr code ஸ்கேன் செய்தால் போதும். இதன் மூலம் நம்முடைய ஆதார் எண்ணை அவர்களால் பார்க்க முடியும். இந்த செயலியில் நம்முடைய ஆதார் மட்டும் அல்லாமல் ஒரே செல்போன் எண்ணுடைய நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் ஐந்து பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்து கொள்ள முடியும் .இந்த செயலியில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
