தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும் தமிழகமே குலுங்கும் வகையில் டிசம்பர் 12-ம் தேதி பாமக போராட்டம் நடத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 324 ஜாதிகளுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17ஆம் தேதி பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
