Categories: இந்தியா

காதல் திருமணம் செய்த இளம்பெண்…!! கை, கால்களை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கும்பல்… கண்களில் மிளகாய் பொடி தூவி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் நரசம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதுகுறித்து அறிந்த ஸ்வேதாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீனும், ஸ்வேதாவும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் செகந்திராபாத்திற்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஸ்வேதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரவீன் அவரை சொந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அங்கு சென்றதும் பிரவீனின் பெற்றோர் ஸ்வேதாவை கவனித்துக் கொண்டனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் பிரவீன் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் ஸ்வேதாவின் கை கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு தரதரவென வெளியே இழுத்து வந்து காரில் கடத்தி சென்றனர். தடுக்க முயன்ற பிரவீன் குடும்பத்தினரையும் அவர்கள் கட்டையால் தாக்கி கண்களில் மிளகாய் பொடி தூவி சென்றனர். இது தொடர்பாக பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்வேதாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

3 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

4 மணத்தியாலங்கள் ago