“திருமணமாகி 3 மாதம் தான் ஆச்சு…” மனைவியுடன் சாப்பிட்டு தூங்கிய கணவர்… மறுநாள் காலை காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2025

Spread the love

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சங்கர். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். சங்கர் மன்னார்குடியை சேர்ந்த தனது உறவினரான கார்த்திகா(25) என்ற பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சங்கர் தனது மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கினார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.