கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் பகுதியில் வசித்து வந்தவர் பலராமன்(65). சிவில் இன்ஜினியரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிதம்பரம் பகுதியில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவிகளும், பிள்ளைகளும் பிரிந்து சென்றதால் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக இவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய உடல் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவருடைய உடலை யாரும் வாங்க வராததால் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் தெரிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் அவர் வசித்து வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் 1.50 லட்சம் பணம் 74 சவரன் தங்க நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை ஒப்படைக்க இவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில்,” பணத்தை சேமிப்பதில் குறியாகவும் இருந்ததால் குடும்பம் பிரிந்து சென்றதாகவும் தற்போது அவர்கள் சென்னையில் வசித்து வருவதாகவும் இவருக்கும் குடும்பத்தினருக்கும் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். காவல்துறையினர் அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட போது அவர்கள் போனை எடுக்க மறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
