மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி: பாட்டிலால் குத்திக் கொடூரக் கொலை..! தமிழகத்தை உழுக்கிய பயங்கரம்…!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதைக் கார்த்திக் தொடர்ந்து தட்டிக் கேட்டு வந்ததாகவும், இதனால் மணல் கடத்தல் கும்பலுக்கும் அவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கார்த்திக் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் கார்த்திக்கை சரமாரியாகக் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மணல் கடத்தலைத் தட்டிக் கேட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“குதிரை பேரம்.. அமித்ஷா பிளான்.. ஆளுநர் முட்டுக்கட்டை”…தவெக-வின் முதல் ரியாக்‌ஷன்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும்…

3 minutes ago

“எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்கள்”… இன்று இரவுக்குள் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம்… அதிமுகவில் அதிரடி திருப்பம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின்…

8 minutes ago

டீப்ஃபேக் வீடியோவா..? விஜய்யின் அதிகார ஆசை தமிழகத்திற்குப் பேரழிவு: டிடிவி தினகரன் அதிரடி அட்டாக்…!

அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி…

13 minutes ago

“அவ்வளவு தான் டைம் ஓவர்”… ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்.. கடைசியில் மொத்தமாக மாறும் கேம்… விஜய்க்கு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

47 minutes ago

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

53 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

57 minutes ago