பணம் யார் தருவது…? மாணிக்கம் தாக்கூரிடம் எகிறிய நிர்வாகிகள்… கைவிரித்த பெரிய தலைகள்… திணறும் டெல்லி தலைமை…!!

Spread the love

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பெரும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. டெல்லி போராட்டத்தை முன்னிட்டுத் தமிழகத்தில் இருந்து சுமார் 2,000 நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் 50 பேரை டெல்லிக்குக் கூட்டி வர வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்குக் கட்சித் தலைமை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மாணிக்கம் தாக்கூர் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, “மாவட்டத்திலிருந்து 50 பேரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ரயிலில் டிக்கெட் கிடைக்காது, விமானக் கட்டணம், ஹோட்டல் அறை வாடகை, 3 நாள் உணவுச் செலவு எனப் பல லட்சங்கள் ஆகும். அந்த அளவுக்குத் தங்களிடம் பொருளாதார வசதி இல்லை, செலவைக் கட்சியே ஏற்றுக்கொண்டால் ஆட்களை அழைத்து வருகிறோம்” என்று மாவட்டத் தலைவர்கள் வெளிப்படையாகவே மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் தாக்கூர், “பதவி மட்டும் வேண்டும், தலைமை உத்தரவிட்டால் ஆயிரம் காரணம் சொல்கிறீர்களா?” எனக் கடிந்துகொண்டதால் கோபமடைந்த மாவட்ட தலைவர்கள், “எங்களுக்கு மாவட்டத்தில் கட்சி வளர்க்கத்தான் பதவி தரப்பட்டது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்தும், 2 அமைச்சர்கள் இருந்தும் நிர்வாகிகளுக்கு என்ன பலன் கிடைத்தது?” எனத் திரும்பக் கேள்வி எழுப்பி சத்தியமூர்த்தி பவனில் காரசாரமாக விவாதித்தனர். இதையடுத்துப் பேச்சைத் துண்டித்துக் கொண்ட மாணிக்கம் தாக்கூர், கட்சி மேலிட உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்று புலம்பியபடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அதிர்ச்சி..! 17 கைதிகள் எஸ்கேப்… சினிமா பட பாணியில் ஜெயில் பிரேக்… கதறிய சிறைத்துறை… அடுத்த நொடியே பறந்த அதிரடி உத்தரவு…!!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…

6 minutes ago

தாமரைப்பூ பறிக்கத் தடை போட்ட பச்சிளம் குழந்தையின் தந்தை கத்திக்குத்து படுகொலை…. பின்னணியில் அதிர வைக்கும் உண்மை…. இரவில் நடந்த கொடூர சம்பவம்….!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால்…

26 minutes ago

காணாமல் போன சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலம்…. தடயத்தை மறைக்க தாய் செய்த கொடூரச் செயல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தனியாமங்கலம் கிராமத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேல், மர்மமான முறையில் பாழடைந்த…

40 minutes ago

“எடப்பாடி கன்ட்ரோலில் அதிமுக இல்ல”…. தனுஷ் அரசியல் வருகை பின்னாடி பாஜக பிளான்… வடிவேலு காமெடி மாதிரி இருக்கு…. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

49 minutes ago

“நடு இரவில் நடுக்கடலில் நடந்த பேரிடர்”…. ஒரே இரவில் மூழ்கிய பிரம்மாண்ட ‘ப்ராஸ்பெக்டர் 5’ ரிக்…. 115 பேருடன் நடுக்கடலில் நடந்த விபத்து…. பலியான இந்தியர்….. அதிர்ச்சி தகவல்…!

ஆப்பிரிக்க நாடான காபோன் கடற்கரைக்கு அருகே, எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 'ப்ராஸ்பெக்டர் 5' (Prospector 5)…

56 minutes ago

“பச்சிளம் குழந்தை முதல் முதியவர்கள் வரை”…. 15 ஆண்டுகளாக மொத்த நாட்டையும் அலறவிட்ட நரமாமிச அரக்கன்…. உகாண்டாவை நடுங்க வைத்த கொடூரம்…..!

கடந்த 15 ஆண்டுகளாக உகாண்டா நாட்டை உலுக்கி வந்த கொடூர சீரியல் கில்லரும், மனித மாமிசம் தின்னும் பழக்கம் கொண்டவனுமான…

1 மணத்தியாலம் ago