“திடீர் பிறந்தநாள் கொண்டாட்டம்…” கதவை திறந்து வைத்து தூங்கியது ஏன்…? செஞ்சி சிறுமி மாயம் வழக்கில் தாயிடம் 3-வது நாளாக சிபிசிஐடி கிடுக்கிப்பிடி…! பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கு, இரண்டு வாரங்களைக் கடந்து தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், வழக்கின் மிக முக்கிய மையப்புள்ளியான சிறுமியின் தாய் பவானியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 3-வது நாளாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் காவல்துறையினர் 10 நாட்கள் தேடியும் சிறுமி குறித்து எந்த ஆதாரமும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் தாய் பவானியை நேரில் வரவழைத்து அடுக்கடுக்கான கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாகக் கொண்டாடப்படாத பிறந்தநாளைச் சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு திடீரெனக் கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடியது ஏன்?

வழக்கமாகத் தாயுடன் தூங்கும் சிறுமி அன்று மட்டும் ஏன் தனியாகப் படுக்க வைக்கப்பட்டாள்? காற்று வரட்டும் என வாசற்கதவைத் திறந்து வைத்துப் படுத்தது மற்றும் நள்ளிரவில் சிறுமி அலறிய சத்தம் தாயின் காதில் விழாதது எவ்வாறு? ஆலம்பூண்டியில் தங்கியிருந்துவிட்டுத் திடீரெனத் தப்பியோடிய சாமியார் சரவணனுடன் இருந்த தொடர்பு என்ன? என்பன போன்ற பல கேள்விகளால் சிபிசிஐடி துளைத்தெடுத்துள்ளது.

ஆரம்பத்தில் காவல்துறையிடம் கூறிய வாய்மொழி வாக்குமூலத்திற்கும், தற்போது சிபிசிஐடியிடம் அளித்த எழுத்துப்பூர்வமான தகவல்களுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் காணப்படுவதால், குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கே இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நகர்ந்து வருகிறது. இதனிடையே 20-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி காவலர்கள் களமிறக்கப்பட்டு, செஞ்சி மற்றும் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், 600-க்கும் மேற்பட்ட செல்போன் தரவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…

25 minutes ago

டெல்லி போடும் மாஸ்டர் பிளான்…! முதலமைச்சர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு…!!

தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…

38 minutes ago

பணம் யார் தருவது…? மாணிக்கம் தாக்கூரிடம் எகிறிய நிர்வாகிகள்… கைவிரித்த பெரிய தலைகள்… திணறும் டெல்லி தலைமை…!!

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள…

48 minutes ago

உளவுத்துறையின் சீக்ரெட் வார்னிங்….! திடீரென ரத்தான முதல்வர் விஜய்யின் பசும்பொன் பயணம்… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…

1 மணத்தியாலம் ago

“எனக்கும் கார், பைக் வாங்கி தா…” நடுரோட்டில் மனைவியை அடித்து மிதித்த கணவர்… தலைமுடியை பிடித்து கொடூரத் தாக்குதல்… இணையத்தை அதிர வைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், தன் மனைவி தார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால், கணவனே மனைவியை…

1 மணத்தியாலம் ago