சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞர், போதை கும்பலால் அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தின் காரணமாக தண்டையார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அப்போது, இக்கொலை வழக்கில் காவல்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட விஷ்ணுவின் குடும்பத்தினருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இக்கொடூர கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…