பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரான மோனு மெதுர்பாலா, தனது தாயாரின் தீவிர உடல்நலக் குறைவின் போது அவர் பூரண குணமடைந்தால் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் பாதயாத்திரை செல்வதாக வேண்டிக்கொண்டார். தாயார் நலம் பெற்றதும், தான் அளித்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக கடந்த மார்ச் 15 அன்று தனது கடினமான பயணத்தைத் தொடங்கினார்.
பேருந்திலோ அல்லது ரயிலிலோ செல்வதற்குப் பதிலாக, நாடு முழுவதும் உள்ள ஜோதிர்லிங்கக் கோயில்களை நோக்கிய தனது நீண்ட ஆன்மீகப் பயணத்தை ஓடிக்கொண்டே கடந்து வருகிறார். தினமும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், இதுவரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து பல ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
https://www.instagram.com/reel/DeraAZIvgG2/?utm_source=ig_web_button_share_sheet
தாயின் மீதான தூய்மையான அன்பிற்கும், நன்றியுணர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மோனுவின் இந்தச் சாதனைப் பயணம், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், தேசத்தின் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
