அட கொடுமையே… இன்ஃப்ளூயன்சர் செய்த விபரீதம்… திரிபுரா இளைஞர் விவகாரத்தில்… வீட்டை வளைத்த டெல்லி போலீஸ்… தலைமறைவாகிய ஷோகீன்… வீடியோ வைரல்…!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை இழிவாகப் பேசிய சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் அமீர் ஷோகீன் என்பவரின் வைரல் வீடியோ தொடர்பாக, டெல்லி காவல்துறை அவரது இல்லத்திற்குச் சென்று விசாரணை நடத்தியது. எனினும், அங்கு அவர் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாகப் பலத்த கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, இது குறித்த விசாரணை டெல்லி காவல்துறையின் IFSO பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

திரிபுரா முதல்வர் மணிக் சாஹா இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாநில காவல்துறை டி.ஜி.பி-யை டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறு உத்தரவிட்டார். மேலும், இந்தச் சம்பவம் குறித்துச் சட்டப்படியான நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தச் செயலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

   

https://www.instagram.com/reel/Deu5PGxzH7N/?utm_source=ig_web_button_share_sheet

   

இதற்கிடையே, கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, அமீர் ஷோகீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்றும், நகைச்சுவைக்காகவே அது எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.