தாய் திட்டியதால் துயரம்…! ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கால்வாயில் குதித்து 19 வயது இளம்பெண் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்..!!

By Devi Ramu on ஐப்பசி 23, 2026

Spread the love

உத்தரப்பிரதேசம் ஹப்பூர் மாவட்டம் சிம்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்லியா கால்வாய் பகுதியில், தாய் திட்டியதால் மனமுடைந்த 19 வயது இளம்பெண் பாலக் என்பவர் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரை கால்வாய் ஓரத்தில் நிறுத்திவிட்டு திடீரென நீரில் பாய்ந்த அவர் மாயமானதைத் தொடர்ந்து, தகவல் அறிந்து விரைந்த மீட்புப் படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் சுமார் 3 மணி நேரத் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். இளம் பெண் உயிரிழந்த இச்சம்பவத்தால் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.